சென்னைவாசியாகிறார் 'லாலேட்டன்'!

|

Mohan Lal Settle Chennai

பெரும்பாலான மலையாள நடிகைகளுக்கு மட்டுமல்ல, நடிகர்களுக்கும் சென்னையில் வீடு உள்ளது. குறிப்பாக மம்முட்டி, மோகன்லால், ஜெய்ராம் உள்ளிட்டோருக்கு சென்னையில் பங்களாக்கள் உள்ளன.

மம்முட்டியும் ஜெயராமும் சென்னைவாசிகள்தான். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சென்னையில் குடும்பத்தோடு தங்கிவிடுவார்கள். மம்முட்டியின் மகன் படித்ததெல்லாம் சென்னையில்தான்.

லாலேட்டன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மோகன்லாலுக்கு சொந்த வீடு இருந்தாலும், அவர் அடிக்கடி வருவதில்லை. ஆனால் இனி சென்னையில் நிரந்தரமாக குடியேறப் போகிறாராம்.

தற்போது திருச்சூரில் உடல் புத்துணர்வுக்காக ஆயுர்வேத சிகிச்சை பெற்று வரும் மோகன்லால், சிகிச்சை முடிந்ததும் ஒலிம்பிக் போட்டிகளை காண லண்டன் செல்கிறார்.

ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு கொச்சியில் உள்ள தன் வீட்டை காலி செய்துவிட்டு சென்னையில் உள்ள தன் பங்களாவில் நிரந்தரமாகக் குடியேறப் போகிறார்.

 

Post a Comment