மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா தனது கோடிக்கணக்கான சொத்துக்களை 2 மகள்கள் பெயரில் எழுதி வைத்துள்ளார். மனைவி டிம்பிளுக்கு பைசா கூட இல்லை.
இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் எனப்படும் பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 18ம் தேதி மரணம் அடைந்தார். அவர் தான் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு தனது கோடிக்கணக்கான சொத்துகளை மகள் டுவிங்கிள் மற்றும் ரிங்கி கன்னா ஆகியோரின் பெயர்களில் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலில் அவரது மனைவி டிம்பிளுக்கு பைசா கூட எழுதவில்லை.
ராஜேஷ் கன்னாவும், டிம்பிளும் 1973ல் காதல் திருமணம் செய்து இரண்டு மகள்களைப் பெற்ற பிறகு 1984ம் ஆண்டு பிரிந்தனர். ஆனால் அவர்கள் விவகாரத்து வாங்கவில்லை. ராஜேஷ் கன்னா உடல் நலம் பாதித்திருந்தபோது அவருக்கு அருகில் டிம்பிள் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை கார்ட்டர் ரோட்டில் உள்ள ராஜேஷ் கன்னாவின் பங்களாவான ஆசிர்வாதை அவரது நினைவாக அருங்காட்சியமாக மாற்ற டுவிங்கிளும், ரிங்கியும் தீர்மானி்ததுள்ளனர்.
Post a Comment