சினிமா டிக்கெட் விலையை குறைக்க வலியுறுத்தி முதல்வரை சந்திக்க விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு முடிவு

|

Tn Film Distributors Meet Jaya

தென்காசி: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சினிமா டிக்கெட் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி மனு கொடுப்பது என்று தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் கூட்டம் குற்றலாம் ஐந்து அருவியில் உள்ள தனியார் அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாலை ராஜா தலைமை தாங்கினர். தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் மதுரை, நெல்லை, தஞ்சை, வேலூர், திருச்சி, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக திரை அரங்குகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை குறைக்க வேண்டி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது முதல்வர் கொடநாட்டில் இருப்பதால் அவர் சென்னை திரும்பியதும் மனு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Post a Comment