ராஜேஷ் கன்னா காதலி திடீர் பல்டி

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
இந்தி நடிகர் ராஜேஷ் கன்னாவின் சொத்து மீது ஆசை இல்லை என்று கூறி அவரது பங்களாவை  விட்டு வெளியேறினார் அனிதா அத்வானி. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா, கடந்த 18ம் தேதி மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது ரகசிய காதலி அனிதா அத்வானி பற்றி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை பாந்த்ராவில் உள்ள ஆஷிர்வாத் பங்களாவில் கடந்த 8 வருடமாக அவர் ராஜேஷ் கன்னாவுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இப்பிரச்னையால் மனைவி டிம்பிள் கபாடியா ராஜேஷ் கன்னாவை விட்டு பிரிந்து வாழ்த்தார்.

ராஜேஷ் கன்னா மறைந்தவுடன் அவரது கடைசி ஆசைப்படி அவர் வாழ்ந்த ஆஷிர்வாத் பங்களாவை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என்று குடும்பத்தினர் மற்றும் பாலிவுட் திரையுலகினர் கூறினார். ஆனால் இதற்கு அனிதா எதிர்ப்பு தெரிவித்ததுடன் தன்னை வீட்டிலிருந்து வெளியேற்ற சதி நடக்கிறது என்று புகார் கூறினார். வீட்டிலிருந்து வெளியேற்றினால் நடவடிக்கை எடுப்பேன் என டிம்பிள் கபாடியாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் பங்களாவை நினைவு இல்லம் ஆக்கு வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அனிதா தனக்கு ராஜேஷ் கன்னா சொத்து மீது ஆசை இல்லை என்று பல்டி அடித்திருக்கிறார். ஆஷிர்வாத் பங்களாவிலிருந்து வெளியேறிய அவர் கிராண்ட் ரோடில் உள்ள வீட்டில் தனது சகோதரியுடன் தங்கி இருக்கிறார்.

இது பற்றி அனிதா நேற்று கூறியதாவது: ராஜேஷ் கன்னாவின் விருப்பப்படி ஆஷிர்வாத் பங்களா மியூசியம் ஆக வேண்டும். என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. ராஜேஷ் கன்னாவின் சொத்தை அடைய வேண்டும் என்ற பேராசையோ, எண்ணமோ எனக்கு கிடையாது. அவரது சொத்து மக்களுக்குத்தான் போய் சேர வேண்டும். அவரது பங்களாவை தாராளமாக மியூசியம் ஆக்கலாம் என்றார்.


 

Post a Comment