அடுத்த வருடம் இந்திக்கு போகிறார் ஜீவா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : அடுத்த வருடம் இந்தி சினிமா துறையில் கால் பதிப்பேன் என்று ஜீவா கூறினார். 'முகமூடி' படத்தில் சூப்பர் மேனாக நடிக்கும் ஜீவா, நிருபர்களிடம் கூறியதாவது:
'முகமூடி'யில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன். இயக்குனர் மிஷ்கின் உற்சாகமூட்டியதன் காரணமாக, பல்வேறு சிரமங்களை தாங்கிக்கொண்டு நடிக்க முடிந்தது. 11 கிலோ எடை கொண்ட சூப்பர் மேன் உடை அணிந்து 20 நாட்களுக்கு மேல் நடித்தேன். உடம்பு முழுவதும் எரியும். எல்லா பாகங்களிலும் சின்னச்சின்ன கட்டிகள் தோன்றும். மேக்கப் கலைத்ததும் உடல் சிவப்பு நிறமாக மாறும். அவ்வளவு வெப்பம். இந்த வேடத்தில் கஷ்டப்பட்டு நடித்தாலும், ரிலீசான பிறகு கிடைக்கும் பாராட்டுகளை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.
ரிலீசுக்குப் பிறகு குறிப்பாக குழந்தைகள் என்னை 'சூப்பர் மேன் அங்கிள்' என்றுதான் கூப்பிடுவார்கள். அடுத்து 'நீதானே என் பொன்வசந்தம்', 'என்றென்றும் புன்னகை', விக்ரமுடன் இணைந்து 'டேவிட்', ரவி கே.சந்திரன் இயக்கும் படம் என பிசியாக இருக்கிறேன். 23 படங்களை நெருங்கி விட்டேன். 25 படத்தை 3டியில் குழந்தைகளைக் கவரும் படமாக உருவாக்க ஆசை. அதற்கான கதையை தேடி வருகிறேன்.
மேலும், 'முகமூடி' படத்தின் 2ம் பாகம், 3ம் பாகம் உருவாகிறது. அவற்றிலும் நானே சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க ஆசை. அடுத்த ஆண்டு பாலிவுட்டில் கால் பதிப்பேன். ரவி கே.சந்திரன் இயக்கும் படம் தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகிறது.


 

Post a Comment