இது வரை காதல் வந்ததில்லை : நடிகை அம்மு

|

I Am Home Bird Actress Ammu

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கலை வாழ்க்கையை தொடங்கியவர் அம்மு. சீரியல், சினிமா, டப்பிங் என 'ஆல் இன் ஆளாக' மீடியா உலகில் வலம் வருகிறார். சினிமா, சின்னத்திரை என இத்தனை ஆண்டுகால பயணத்தில் காதல் பக்கங்கள் இவருக்கு கிடையாதாம். அம்மா பார்த்து வைக்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிறார் இவர்.

தனது பயணங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்..

நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொடங்கிய வாழ்க்கை இப்பொழுது சினிமாவில் நாயகி ஆகும் அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. மலையாளப் படத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். சினிமாவில் பெயர் சொல்லும் படியான நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

நடிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு, டப்பிங், சினிமா என வாழ்க்கை பிஸியாக போய்க்கொண்டிருக்கிறது. ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஓவியா என்ற திகில் தொடரில் நடித்தது எனக்கு மறக்கமுடியாத அனுபவம். முதன்முறையாக இதுபோன்ற திகில் தொடரில் நடித்தேன். அதேபோல் சன் டிவியில் பைரவி தொடரில் நடித்ததும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

பெரியதிரை பக்கம் இப்போதைக்குக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். அதனால் வேறு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை

நடிப்பு, டப்பிங், தொகுப்பாளினி என எந்த வேலையுமே எனக்கு இஷ்டப்பட்டதுதான் அதனால் எதையுமே நான் கடினமாக நினைக்க வில்லை. வேலை மட்டுமல்ல; எதையும் கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டம். சுலபம் என்று நினைத்தால் சுலபம்.

மீடியா உலகில் இத்தனை ஆண்டுகாலம் இருந்தும் எனக்க இதுவரை காதல் வரவில்லை. இனியும் வருமா என்று தெரியவில்லை. அதனால் மாப்பிள்ளை பார்க்கும் வேலையை அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டேன்!

 

Post a Comment