ஷங்கர் படத்தில் ஸ்ருதி ஹாஸன் இல்லை... ஒரே ஹீரோயின் எமிதான்!

|

No Place Shruthi Shankar S Movie

ஷங்கர் படத்தில் எமி ஜாக்ஸன் மட்டும்தான் ஹீரோயின். இரண்டாவது ஹீரோயினாக ஸ்ருதி நடிப்பார் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை என்று இயக்குநர் ஷங்கர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விக்ரம் நடிக்க, ஷங்கர் இயக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் புதிய படம் ஐ. ரொமான்டிக் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் சமந்தா.

ஆனால் உடல் நிலை காரணமாக அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட, அவருக்கு பதிலாக எமி ஜாக்ஸன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் இன்னும் ஒரு ஹீரோயினும் உண்டு என்றும், அந்த வேடத்துக்கு ஸ்ருதிஹாஸன் மற்றும் காஜல் அகர்வால் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியானது.

ஆனால் இப்போது அதில் உண்மையில்லை என ஷங்கர் தரப்பே மறுத்துள்ளது.

"இந்தப் படத்தில் கதைப்படி ஒரு ஹீரோயின்தான். அப்புறம் எப்படி இன்னொரு ஹீரோயின் வரமுடியும். தனிப்பட்ட ஆதாயங்களுக்காக யாராவது இப்படி செய்தி கிளப்பிவிட்டிருப்பார்கள். அதை நம்ப வேண்டாம்," என்று ஷங்கர் அலுவலகத்தில் தெரிவித்தனர்.

 

Post a Comment