டிவி தொடரில் தம்பதிகளாக நடிக்கும் ஒரு ஜோடி நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகியிருக்கிறார்கள். இளவரசி தொடரில் மனமொத்த தம்பதியர்களாக நடித்த சந்தோஷி - ஸ்ரீகர் ஜோடிதான் அவர்கள்.
ராடன் மீடியா ஒர்க்ஸ் தயாரித்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி தொடர் இளவரசி. இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை சந்தோஷி. மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இளவரசி தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளனது. இதில் முக்கிய கதாபாத்திரமான இளவரசியாக சந்தோஷி நடித்து வருகிறார். இவர் பிரபல தொலைக்காட்சி நடிகை பூர்ணிமாவின் மகள். இவரது கணவர் சுப்ரமணியாக நடிப்பவர் ஸ்ரீகர். டிவி தொடரில் சந்தோஷமாக குடும்பம் நடத்திய இந்த ஜோடி கடந்த வாரத்தில் பெற்றோர்களின் ஆசீர்வாதங்களுடன் நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இளவரசி தொடரில் எவ்வளவோ பிரச்சினைகளை சமாளித்து வெற்றிகரமான தம்பதிகளாக வலம் வரும் இந்த ஜோடி நிஜ வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இளவரசி டீம் வாழ்த்தியிருக்கிறது.
Post a Comment