ஆடி மாசம் வருது... போடு பூஜையை!

|

4 New Film Poojas On Sunday Due Aad   

ஆடி மாதம் இன்று தொடங்கிவிட்டது. தமிழ் சினிமா ஸ்டுடியோக்கள் இன்னும் ஒரு மாதத்துக்கு காற்று வாங்கும்!

காரணம், ஆடியை ராசியில்லாத மாதம் என்று கருதும் தமிழ் சினிமா படைப்பாளிகள், இந்த மாதத்தில் எந்தப் படத்தையும் தொடங்கமாட்டார்கள்

எனவே ஆடி பிறப்பதற்குள் அத்தனை படங்களுக்கும் பெயருக்காவது ஒரு பூஜையைப் போட்டு வைப்பது வழக்கம்.

அந்த வகையில் கடந்த வாரம் முழுக்க கோடம்பாக்கத்தில் எங்கும் பூஜை மயம். ஸ்டுடியோக்களில் இடம் கிடைக்காதவர்கள், சின்னதாக தங்கள் அலுவலகங்களிலேயே போட்டுக் கொண்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 4 புதிய பட பூஜைகள் நடந்தன. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - எமி நடிக்கும் ஐ படத்துக்கு நேற்றுதான் பூஜை நடந்தது.

அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி - ரிச்சா நடிக்கும் பிரியாணிக்கும் நேற்றுதான் பூஜை.

மலையாள இயக்குநர் வினயன் தமிழ் - மலையாளத்தில் இயக்கும் 3 டி படமான டிராகுலா மற்றும் நான்காம் பிறை, சௌந்தர் இயக்கும் தேடினேன் போன்ற படங்களுக்கும் நேற்று பூஜை போடப்பட்டது.

கோயில்களில் அம்மனுக்கு அமர்க்கள பூஜை நடப்பதே இந்த ஆடி மாசத்தில்தான் என்று கோடம்பாக்கவாசிகளுக்கு யாராவது உரக்கச் சொல்லுங்கப்பா!

 

Post a Comment