நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகரும், பாஜக தலைவருமான சத்ருகன் சின்ஹாவுக்கு(66) மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து கடந்த 2ம் தேதி மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவர்களின் அறிவுறைப்படி கடந்த 17ம் தேதி மாலை அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ள அவர் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அவரது மனைவி பூனம் சின்ஹா கூறுகையில்,
எங்கள் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடந்தபோது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயத்தில் அடைப்புகள் இருப்பது தெரிந்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமாக உள்ளார் என்றார்.
சத்ருகன் சின்ஹா பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் தந்தை ஆவார்.
Post a Comment