டெல்லி: மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமையை நிறுத்துமாறு பிரதமரைச் சந்தித்து கேட்டுக் கொண்டார் நடிகர் அமீர்கான்.
சத்யமேவ ஜெயதே என்ற பெயரில் சமூகப் பிரச்சினைகளை அலசி வருகிறார் அமீர்கான்.
அந்த வகையில் கடந்த வாரம் சாதிய கொடுமைகள் குறித்து அவர் விவாதம் நடத்தினார். ஆனால் "இந்த எபிசோடில் அவர் அந்தக் கொடுமைகளை முழுவதுமாகக் காட்டவில்லை. இந்த கொடுமைக்கு என்ன தீர்வு என்று கூட காட்டவில்லை. இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடிய அண்ணல் டாக்டர் அம்பேத்கரைக் கூட அவர் முதன்மைப் படுத்தவில்லை," என்ற விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், பேச்சோடு நிறுத்தாமல் செயலிலும் இறங்கினார் அமீர்கான்.
டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த அமீர் கான், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அமீர் கான் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதி அளித்ததாவும் கான் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக்கைச் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார் அமீர்கான்.
Post a Comment