சென்னை, : வில்லன் மற்றும் ஹீரோ வேடங்களில் நடித்து வந்தவர் டேனியல் பாலாஜி. இப்போது குணசித்திர வேடத்தில் நடிப்பதாக அவர் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
தொடர்ந்து சிறந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. 'வேட்டையாடு விளையாடு' உட்பட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்தேன். என் வில்லன் நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது. சில படங்களில் ஹீரோவாக நடித்தேன். இப்போது 'மறுமுகம்' படத்தில் ஆன்டிஹீரோவாக நடிக்கிறேன். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. கன்னடத்தில் ரிலீஸான 'களவாணி' ரீமேக்கில் ஹீரோயினுடைய அண்ணனாக நடித்தேன். இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறேன். தமிழில் இளையதேவன் இயக்கும் 'ஞானக்கிறுக்கன்'என்ற படத்தில் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடிக்கிறேன். குணசித்திர வேடம். இதுவரை நான் நடித்த வேடங்களில் இருந்து வித்தியாசமாக இருந்ததால் ஒப்புக்கொண்டேன். மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்.
இவ்வாறு டேனியல் பாலாஜி கூறினார்.

Post a Comment