விவாகரத்தான, அழகான, எதற்கும் தயாராக உள்ள ஆண் வேண்டும் - சோனாவின் அறிவிப்பு

|

Sona Wants Marry Divorsee

சென்னை: மேரேஜா.. சீச்சீ... எனக்கு ஆண்களைப் பிடிக்கவே பிடிக்காது. ஆண்களோடு வாழவே முடியாது, என்றெல்லாம் தத்துவம் பொழிந்து வந்த சோனா, இப்போது திருமணம் செய்ய ஆசையாக இருப்பதாகக் கூறிவருகிறார்.

சோனா ‘கோ‘, ‘குரு என் ஆளு', ‘பத்து பத்து', ‘குசேலசன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ‘கனிமொழி' படத்தை தயாரிக்கவும் செய்தார்.

தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டு உள்ளார்.

ஆரம்பத்தில் ஆண்களைப் பிடிக்காது என்று கூறிவந்தாலும், ஆண்களுடன் எல்லா பார்ட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு கலாட்டா செய்து வந்தார்.

இப்போது, தனது டுவிட்டரில், "விவாகரத்தான, அழகான, புத்திசாலியான ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. என்னை நன்றாக புரிந்து கொள்பவராகவும், எதையும் ஸ்போர்டிவாக எடுத்துக் கொள்பவராகவும் அவர் இருக்க வேண்டும்.. சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகப் போகிறேன், " என தெரிவித்துள்ளார்.

சோனா தயார்.... யாராவது இருக்கீங்களா?

 

Post a Comment