கும்கி படத்தின் இசையை கமல் ஹாஸன் வெளியிடுகிறார். நடிகர் சூர்யா முதல் சிடியை பெற்றுக் கொள்கிறார்.
பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகும் படம் கும்கி. பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்தப் படத்தை யுடிவியும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.
யானைகளைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. மைனாவுக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கியுள்ள படம் என்பதால், பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இமான் இசையில் உருவாகியுள்ள, இப் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஜூலை 27-ம் தேதி சென்னை சத்யம் சினிமாஸில் நடக்கிறது.
நடிகர் கமல்ஹாஸன் முதல் சிடியை வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக் கொள்கிறார்.
இந்த விழாவில் ரஜினியும் கலந்து கொள்வார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் பிரபு மகனை வாழ்த்தி வீடியோ பேட்டி மட்டும் கொடுத்துள்ளார். வெளியூரில் இருப்பதால் இந்த விழாவில் கலந்து கொள்வாரா என்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.
Post a Comment