என்னை நரகத்திலிருந்து மீட்டவர் என் மனைவி கீதாஞ்சலி என்று கூறியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
இயக்குனர் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. முதல் ஆண்டு திருமண நாள் விழாவை இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் செல்வராகவன் கொண்டாடினார்.
வெளிநாட்டு நிபுணர்களை வைத்து இந்த படத்துக்கு தொழில்நுட்ப பணிகளை செய்து வருகிறார் செல்வராகவன். ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் தனது கனவுப்படம் என்று கூறிவருகிறார் செல்வா.
முதல் வருட திருமண நாளையொட்டி தனது ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இந்த ஒரு வருடம் எனக்கு மகிழ்ச்சியும், போரானந்தத்தையும் அளித்து உள்ளது. இதற்காக என் மனைவி கீதாஞ்சலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நரகத்திலிருந்த என்னை அவர்தான் மீட்டு, சொர்க்கத்தை காட்டி இருக்கிறார். இந்த அற்புதமான வாழ்க்கையை தந்த மனைவி கீதாஞ்சலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment