சென்னை: மதுவிருந்தில் நடிகை டாப்சிக்காக நடந்த மோதலில் நடிகர் மகத்தைத் தாக்கிய வழக்கில் மஞ்சு மனோஜூக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
சென்னையில் நடிகர் ஒருவர் கடந்த 7-ந் தேதி மது விருந்து நிகழ்ச்சி நடத்தினார். அப்போது நடிகர்கள் மஞ்சு மனோஜ் மற்றும் மகத் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நடிகை டாப்சிக்காக நடந்ததாகக் கூறப்படும் இந்த மோதலில் இரண்டு நடிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் பற்றி ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மனோஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் மனுதாக்கல் செய்தார்.
அவர் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.நடராஜன் ஆஜரானார். அவர்களுக்குள் வாய்த் தகராறுதான் நடந்தது என்றும், மோதல் ஏற்படவில்லை என்றும் அவர் வாதிட்டார்.
இந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். நடிகர் மனோஜ்க்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Post a Comment