பூலோகம் படத்துக்காக சென்னையில் திடீர் நகர்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை : ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம், 'பூலோகம்'. ஜெயம்ரவி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை. சதீஷ்குமார் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் என்.கல்யாண கிருஷ்ணன் கூறியதாவது:
வட சென்னையில் இரண்டு பிரபலமான குத்துச் சண்டை பரம்பரை இருந்தது. அவர்களுக்குள் குத்துச் சண்டை மோதலும், அது தொடர்பான வெளி மோதல்களும் பல ஆண்டுகள் நடந்து வந்திருக்கிறது. இப்போது அந்த பரம்பரையினர் குத்துச் சண்டையில் ஈடுபடாவிட்டாலும் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த பின்னணியில் இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயம்ரவி குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார். அவருடன் நிஜ குத்துச்சண்டை வீரர்கள் நடிக்கிறார்கள். இரண்டு பிரபல ஹாலிவுட் குத்துச்சண்டை வீரர்களை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு நடந்துவருகிறது.
1931-ம் ஆண்டு துவங்கும் கதை 2012-ல் முடிகிறது. இதற்காக நிறைய ஆராய்ச்சிகள், தேடுதல்கள் செய்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்ததும் இதை வைத்து கண்காட்சி நடத்த திட்டமிட்டிருக்கிறேன். சென்னை மக்களின் சிறு தெய்வ வழிபாடு, திருவிழாவையும் பதிவு செய்திருக்கிறேன். படத்துக்காக வடபழனியில் 50 ஏக்கர் நிலத்தில் 'திடீர் நகர்' என்ற ஒரு நகரை ஆர்ட் டைரக்டர் மோகன் உருவாக்கினார். அதில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தினோம்.


 

Post a Comment