சமந்தா, ஹன்ஸிகா, கார்த்திகா வரிசையில் இப்போது, பெரிய இயக்குநர் படத்திலிருந்து விலகியிருப்பவர் ரிச்சா கங்கோபாத்யாய்.
ஜெய்-சந்தானம் நடிக்கும் தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ரிச்சா. படப்பிடிப்பு அடுத்த வாரம் ஹைதராபாதில் தொடங்கவிருந்த நிலையில், கால்ஷீட் பிரச்சினையால் அந்தப் படத்திலிருந்து ரிச்சா விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் தயாரிக்கிறது.
படத்திலிருந்து தானே விலகிக் கொண்டதாக ரிச்சா கூறிவரும் நிலையில், 'படத்தின் கதாநாயகன் ஜெய்யை விட மூத்த பெண் போல ரிச்சா தோற்றமளிப்பதாகக் கூறி ரிச்சாவை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக' கவுதம் மேனன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே படத்தின் கதாநாயகியாக அபிநயா தேர்வு செய்யப்பட்டு கால்ஷீட் பிரச்சினை காரணமே அவர் வெளியேறிவிட்டது நினைவிருக்கலாம்!
Post a Comment