வெள்ளிக்கிழமை... பெரிய படம் எதுவும் இல்லை!

|

Four Small Films Hit This Week

இன்று வெள்ளிக்கிழமை... பெரும் படங்கள் எனும் புயல் டல்லடித்து ஓய்ந்துவிட, சின்னப் படங்கள் வழக்கம்போல சளைக்காமல் வெளியாகி வருகின்றன.

இந்த வாரமும் நான்கு சிறிய படங்கள் வெளியாகின்றன. மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற காதல் படம், பொல்லாங்கு என்றொரு த்ரில்லர் மற்றும் சுழல் என்ற படம். ஷகிலா பீரடிக்கும் ஆசாமி என்ற படமும் வெளியாவதாகக் கூறியுள்ளனர்.

திரையரங்குகளில் பெரும்பாலானவற்றை இத்தனை நாளும் சகுனி, பில்லா படங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது ஓரளவு அரங்குகள் 'ஃப்ரீ' ஆகிவிட்டதால், அவற்றில் இந்த சின்னப் படங்களை திரையிட்டுள்ளனர்.

இந்த வாரம் குழந்தைகளுக்குப் பிடித்த ஐஸ் ஏஜ் படத்தின் நான்காவது பாகமும் வெளியாகிறது. தமிழ்ப் படங்களுக்கு இணையான அளவு எண்ணிக்கையில் இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 15-ம் தேதி வரை சிறிய படங்கள்தான் வெளியாகிக் கொண்டிருக்கும். அந்த வகையில் இன்னும் அரை டஜனுக்கும் மேல் சின்னப் படங்கள் காத்திருக்கின்றன.

 

Post a Comment