படம் தயாரிக்கிறார் சந்தானம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹீரோவாக நடிக்கும் படத்தை சொந்தமாக தயாரிக்கிறார் சந்தானம். முன்னணி ஹீரோக்கள் சொந்த பட நிறுவனம் தொடங்கி நடிக்கின்றனர். அந்த வரிசையில் காமெடி நடிகர் சந்தானம் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். இப்படத்தை மணிகண்டன் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: நூறு படங்களுக்கு மேல் இயக்கி சாதனை படைத்த ராம.நாராயணனுடன் இணைந்து சந்தானம் தயாரிக்கும் படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையாÕ. நகைச்சுவையும், நட்பின் பெருமையையும் விளக்கும் கதை. காமெடி பட வரிசையில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும். விசாகா ஹீரோயின். டாக்டர் சீனிவாசன், பட்டிமன்றம் ராஜா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை தமன். ஒளிப்பதிவு கே.பாலசுப்ரமணியன். இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கி காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை ஆகிய இடங்களில் நடக்கிறது. இவ்வாறு மணிகண்டன் கூறினார்.



 

Post a Comment