குத்துப்பாடலில் மீண்டும் டான்ஸ் மாஸ்டர் பாபி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : பிரபு சாலமன் இயக்கிய 'மைனா' படத்தில் இடம்பெற்ற, 'ஜிங்ஜிக்கா' பாடலுக்கு ஆடியவர் டான்ஸ் மாஸ்டர் பாபி ஆண்டனி. பல்வேறு படங்களுக்கு நடனம் அமைத்துள்ள அவர் கூறியதாவது:
இப்போது 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் இடம்பெறும் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளேன். இதுவும் குத்துப்பாடல்தான். 'ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்/நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' என்று தொடங்கும் இந்தப் பாடல் எல்லோரும் ஆடும்படி இருக்கும். இயக்குனர் பாலாஜி தரணிதரன் கேட்டுகொண்டதால நடனம் ஆடினேன். 'மைனா' படத்துக்கு பிறகு நிறைய படங்களில் ஆடும்படி கூறினர். நான் முகம் காட்டுவதை விரும்பவில்லை.
திரைக்கு பின் நிற்கவே எப்போதும் விரும்புகிறேன். நண்பர்கள் வற்புறுத்தலால் ஆட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தொடர்ந்து பல படங்களுக்கு நடனம் அமைத்து வருகிறேன்.


 

Post a Comment