சென்னை, : ஸ்ரீ நாச்சியாரம்மன் பிலிம்ஸ் சார்பில் அழகன் தமிழ்மணி, போரூர் கே.எம்.கண்ணன், டி.தமிழ்நம்பி தயாரிக்கும் படம், 'மீன்கொத்தி'. அஜெய் கிருஷ்ணா, ஷோபனா நாயுடு, காதல் சுகுமார், பிறைசூடன், ரமேஷ்கண்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, லியோ.டி. இசை, தினா. பாடல்கள்: கங்கை அமரன், பிறைசூடன், இளையகம்பன். சஞ்சய்ராம் இயக்குகிறார். இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அழகன் தமிழ்மணி வரவேற்றார். ரவி கொட்டாரக்கரா, சிவசக்தி பாண்டியன், யார் கண்ணன், கே.எஸ்.சீனிவாசன், காட்ரகட்ட பிரசாத் உட்பட பலர் கலந்துகொண்டனர். ''பாசத்துடன் வளர்ந்த உடன்பிறப்புகள், பணத்துக்காக பகையாளி ஆகிறார்கள். வீடு ரெண்டுபட்டால், கூலிப்படைக்கு கொண்டாட்டம். கூலிப்படை ஆள் இப்பிரச்னையில் தலையிடுகிறான். அதன் முடிவு என்ன என்பது கதை'' என்றார் சஞ்சய் ராம்.
Post a Comment