கொச்சி: புது நடிகைகள் வரவால் தனது மார்க்கெட் போய்விட்டதாக புலம்ப ஆரம்பித்துள்ளாராம் மீரா ஜாஸ்மினன்.
தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். அவரது நடிப்புத் திறமைக்கு இணையானது அவர் கிளப்பும் பிரச்சினைகளும்.
மலையாளத்தில் மீரா ஜாஸ்மின் என்றாலே 'ட்ரபிள்மேக்கர்' என்ற பெயர் உண்டு. கூடவே அவரது காதல் பிரச்சினைகளும் சேர்ந்து கொள்ள, புதுப்படங்களுக்கு அவரை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை. தற்போது 'லிசமாயிடே வீடு' என்ற மலையாள படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
தமிழில் அவர் கடைசியாக நடித்தவை மம்மட்டியான், ஆதி நாராயணா போன்றவைதான்.
இப்போது உருவாகும் பெரும்பாலான படங்களில் புது நடிகைகள்தான் நடித்து வருகின்றனர்.
மேலும், ரீமா கல்லிங்கல், காவ்யா மாதவன், நவ்யா நாயர் போன்றவர்களும் களத்தில் கடும்போட்டியைத் தர, அதை சமாளிக்க முடியாமல் தடுமாறிப் போயுள்ளாராம் மீரா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "திறமைக்கு மதிப்பு குறைந்துவிட்டது. அனுபவசாலிகளை நல்ல ரோல்களில் நடிக்க கூப்பிடுவதில்லை. ஈகோ பிரச்சினைதான் இதற்குக் காரணம். புதியவர்களுக்கு நான் எதிரி இல்லை. ஆனால் புதியவர்களுக்காக இருப்பவர்களை ஓரம்கட்டுவது சரியா?" என்று கேட்டுள்ளார்.
Post a Comment