சென்னை, : 'முத்துக்கு முத்தாக', 'கோரிப்பாளையம்' உட்பட பல படங்களில் நடித்தவர், சுஜிபாலா. தற்போது 'உண்மை' என்ற படத்தில் நடிக்கிறார். இதை இயக்கி நடிக்கும் ரவிகுமாரும் சுஜிபாலாவும் முதலில் நட்பாகப் பழகினர். இந்த நட்பு காதலானது. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததை அடுத்து நாகர்கோவில், கொய்யன்விளை திருமண மண்டபத்தில் இரு தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதுபற்றி சுஜிபாலா கூறும்போது, 'இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அக்டோபரில் திருமணம் நடக்கும்' என்றார்.
இதுபற்றி சுஜிபாலா கூறும்போது, 'இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அக்டோபரில் திருமணம் நடக்கும்' என்றார்.
Post a Comment