ஷூட்டிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் பட ஷூட்டிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று திடீர் தடை வித¤க்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பை உள்ளிட்டவற்றை கடைகளில் விற்க சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது, குப்பை போடக்கூடாது என்று இயக்குனர் வசந்த் கட்டுப்பாடு வித்திருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:

Ôமூன்று பேர் மூன்று காதல்Õ என்ற படம் இயக்கி வருகிறேன். அர்ஜுன், சேரன், விமல் நடிக்கின்றனர். கோவையில் ஷூட்டிங் நடக்கிறது. எனது படங்களில் சமூக கருத்துக்களை வலியுறுத்தி இருக்கிறேன். Ôசத்தம் போடாதேÕ படத்தில் குடிக்கு அடிமையானவர்களின் பிரச்னை பற்றி கூறினேன். இப்படத்தை தொடங்குவதற்கு முன் போதைக்கு அடிமையானோருக்கான குறை கேட்கும் கூட்டம் ஒன்றில் பங்கேற்றேன். அவர்களின் சோகக் கதைகள் என்னை கண்ணீர் சிந்த வைத்தது. இது பற்றி படத்தில் புதிய கருத்தை கூறி இருந்தேன். சமூக அக்கறையுடன் படங்கள் எடுக்கும்போது அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்று எண்ணுகிறேன். தற்போது எனது பட ஷூட்டிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது, ஷூட்டிங் நடக்கும் இடத்தில் குப்பை போடக்கூடாது என்று தடை விதித்திருக்கிறேன்.


 

Post a Comment