திருமணப் பேச்சை எடுத்தாலே ஓட்டம் பிடிக்கும் சைப், கரீனா

|

Kareena Kapoor Saif Ali Khan S Wedd

பாலிவுட் நடிகை கரீனா கபூர் திருமணம் செய்து கொண்டால் தனது கெரியர் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறாராம். அதனால் அவர் திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவை மூட்டை கட்டி வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சைப் அலி கான், நடிகை கரீனா கபூர் பல ஆண்டுகளாக காதலர்களாகவே வலம் வந்தனர். இவர்கள் எப்பொழுது தான் திருமணம் செய்வார்கள் என்று பாலிவுட் காத்திருந்தது. இந்தா அந்தா என்று ஒரு வகையாக வரும் அக்டோபர் 16ம் தேதி திருமணம் என்று அவர்கள் தெரிவிக்கவில்லை. சைபின் தாயாரும், பாலிவுட் நடிகையுமான சர்மிளா தாகூர் கூறினார்.

இந்நிலையில் அக்டோபரிலும் திருமணம் நடக்காது போல் இருக்கு. சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் ஒப்பந்தமான கரீனாவுக்கு திருமணம் என்றதும் அந்த வாய்ப்பு போனது. திருமணப் பேச்சால் கரீனா மேலும் சில பட வாய்ப்புகளை இழந்தார். உச்சத்தில் இருக்கையில் திருமணம் செய்து கொண்டால் நம்மை ஓரங்கட்டிவிடுவார்கள் போன்று என்று கரீனா அஞ்சுகிறார். இதனால் அவர் திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவை ஓரங்கட்டியுள்ளாராம்.

மேலும் யாராவது கரீனாவிடம் திருமண தேதி பற்றி கேட்டால் எரிச்சல் அடைகிறாராம். திருமண தேதியைத் தானே கேட்டோம், ஏதோ கேட்கக் கூடாததை கேட்ட மாதிரி இவர் குதிக்கிறாரே என்று பலர் வியக்கின்றனர்.

இவர் தான் இப்படி என்றால் சைபிடம் நீங்களாவது திருமண தேதியை கூறுங்களேன் என்றால், நான் ரொம்ப பசி. 2 மாதம் போகட்டும் அதன் பிறகு தெரிவிக்கிறேன் என்கிறார். அவர்கள் பேச்சைப் பார்த்தால் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையே போய்விட்டது பலருக்கும்.

இருவருமே படத்தில் நடிப்பதில் தான் குறியாய் இருக்கின்றனர். அதனால் நீங்களும் அவர்களைப் பற்றி நினைக்காமல் வேலையைப் பாருங்கள்.

 

Post a Comment