காஜல் அகர்வால் மீது தாணு புகார்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காஜல் அகர்வால் கால்ஷீட் பிரச்னை செய்வதால் விஜய் பட ஷூட்டிங் தாமதமாவதாக தயாரிப்பாளர் புகார் கூறுகிறார். தமிழில் சூர்யாவுடன் மாற்றான், விஜய்யுடன் துப்பாக்கி படங்களில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்தியில் ஒரு படத்திலும் தெலுங்கில் 2 படங்களிலும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு படங¢களில் நடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென வந்த இந்தி வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் காஜல். இதனால் அவரது கால்ஷீட் தேதிகளில் குளறுபடி ஏற்பட்டது. மாற்றான், துப்பாக்கி என 2 படங்களிலும் காஜல் நடிக்க வேண்டிய பாடல் காட்சிகள் பாக்கி உள்ளது. ஆனால் குறிப்பிட்ட தேதிகளில் ஷூட்டிங்கிற்கு காஜல் போகாததால் அந்த பாடல் காட்சிகளை படமாக்க முடியாமல் படக்குழு தவித்ததாம். சூர்யாவுடன் காஜல் டூயட் பாடும் பாடலை மாற்றான் படத்துக்காக வெளிநாட்டில் படமாக்க கே.வி.ஆனந்த் திட்டமிட்டார். இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன் காஜலின் கால்ஷீட் வாங்கியிருந்தார். ஆனால் சொன்ன தேதியில் அவர் வரவில்லை.
இந்தி பட ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். ஸாரி, கொஞ்சம் அட்ஜெட் பண்ணிக்குங்க என்று மட்டும் காஜலிடமிருந்து பதில் வந்ததாம். இதனால் அந்த பாடல் காட்சியை சென்னை ஸ்டுடியோவிலேயே படமாக்க யோசித்திருக¢கிறார் ஆனந்த். இதேபோல் துப்பாக்கி படத்தில் 2 பாடல்கள் பாக்கி உள்ளது. இதில் பங்கேற்க தனது கால்ஷீட் தேதியை மாற்றி கொடுத்துள்ளாராம் காஜல். இது குறித்து பட தயாரிப்பாளர் தாணு கூறும்போது, துப்பாக்கி படம் தாமதம் ஆவது உண்மைதான். காஜல் கொடுத்துள்ள தேதிகளில் பாடல் காட்சிகளை படமாக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஆகஸ்டில்தான் ஷூட்டிங் நடத்த முடியும் என்றார்.


 

Post a Comment