'டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நான் இல்லை. என் பெயரை பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள்' என்று அசின் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: என்னை பற்றி பெருமையடித்துக் கொள்வதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமில்லாமல் மற்றவர்களைப் போல எனது தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்திக் கொள்வதையும் விரும்பவில்லை. டுவிட்டர், பேஸ்புக்கில் இணைந்திருப்பதால் பலருக்கு ஆதாயம் கிடைக்கலாம். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் அமைதியாக இருக்க நினைப்பவள். அதனால் என் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை உடனுக்குடன் வலையேற்றிக் கொண்டிருக்க முடியாது. அதனால் சமூக வலைத்தளங்களில் நான் இணைய வில்லை. ஆனால், எனது பெயரில் பல கணக்குகள் டுவிட்டரில் காண கிடைக்கிறது. எனது படங்களை வெளியிட்டு நான் செல்கிற விழாக்களின் படங்களையும் வெளியிட்டு நானே அப்டேட் செய்வதை போல சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது வருத்தமாக இருக்கிறது.
Post a Comment