பவுனு பவுனுதான் போன்ற படங்கள் மூலம் திறமையான நடிகை எனப் பெயரெடுத்த ரோகினி விரைவில் இயக்குநராக வலம் வரப் போகிறார்.
இவர் இயக்கும் முதல் படத்துக்கு அப்பாவின் மீசை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
திரைக்குப் பின்னால் பணியாற்றுவது ரோகினிக்குப் புதிதல்ல. ஏற்கெனவே கமல் நடித்த 'வேட்டையாடு விளையாடு' படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
விரைவில் வெளிவர இருக்கும் 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' படத்தில் அனைத்து பாடல்களையும் இவரே எழுதி இருக்கிறார்.
விளம்பரங்கள், குறும்படங்கள் என திரையுலகில் பல பரிமாணங்களில் தன்னை முன்னிலைப்படுத்தி வந்த ரோகினிக்கு, தற்போது இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.
இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறவர் இயக்குனர் சேரன்!
Post a Comment