சென்னை, : விஸ்வாஸ் ஹி லாட், புருஷோத்தமா தயாரிக்கும் படம் 'பாகன்'. ஸ்ரீகாந்த், ஜனனி அய்யர் ஜோடி. அஸ்லம் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இப்போது புதிய பாடல் ஒன்றை சேர்க்க உள்ளனர்.
இதுபற்றி அஸ்லம் கூறியதாவது:
இது காமெடி கலந்த காதல் கதையை கொண்ட படம். படம் முடிந்து ரீ ரெக்கார்டிங் நடந்து வருகிறது. இப்போது படத்தை பார்த்த தயாரிப்பாளர்கள் காதலை இன்னும் அழுத்தமாக்க இரண்டாம் பாதியில் டூயட்டை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்றனர். இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடம் சொன்னேன். அவரும் சரி என்று அழகான ட்யூனை உருவாக்கினார். 'இப்படியொரு கண்களை கண்டதில்லை' என்று தொடங்கும் இந்தப் பாடல் மெலடியாக உருவாகியிருக்கிறது. இந்த பாடலை படமாக்க உள்ளோம். அடுத்த மாத இறுதியில் படம் வெளியாகும்.இவ்வாறு அஸ்லம் கூறினார்.

Post a Comment