யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'தாண்டவம்' படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. தாண்டவம் படத்தில் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். 'தெய்வதிருமகள்' படத்திற்கு பிறகு இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ள லட்சுமிராய் வித்தியாசமாக நடித்துள்ளாராம், அப்படி என்ன வித்தியாசம் கிளாமர் உடை அணிந்து கவர்ச்சியாகவே தோன்றி வந்த லட்சுமிராய் இந்த படத்தில் கிளாமருக்கு டாட்டா காட்டி இருக்கிறாராம்.
Post a Comment