சென்னை: இசைஞானி இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் இசை, நீதானே என் பொன்வசந்தம் படத்தினுடையதுதான்.
இளையராஜா இந்தப் படத்துக்காக லண்டனில் ஒலிப்பதிவு செய்தார். மொத்தம் 8 பாடல்கள். ஒரு இடைவெளிக்குப் பிறகு ராஜா தனக்கே உரிய பாணியில் இந்தப் படத்துக்கு இசை தந்துள்ளார்.
படத்தின் பாடல்கள் குறித்து தொடர்ந்து வெளியான முன்னோட்ட வீடியோக்கள் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன. குறிப்பாக யுவன் சங்கர் ராஜா பாடிய சாய்ந்து சாய்ந்து பாடல் இப்போதே அனைவர் மனதிலும் பற்றிக் கொண்டுள்ளது.
சோனி நிறுவனம் இந்தப் படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது.
வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி, சென்னையில் மிகப் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. படத்தின் பாடல்களை மேடையில் நேரடியாக இசைக்கப் போகிறார் இசைஞானியும் அவரது குழுவினரும்.
இந்தத் தகவலை இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.
இசை அபிமானிகளின் மனதைக் குளிர வைத்துள்ள செய்தி இது!
Post a Comment