11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த விஜய்!

|

Vijay Hosts Free Wedding 11 Couples

வேலூர்: வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் மன்றங்கள் சார்பில் 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து, 51 சீர்வரிசைப் பொருள்களையும் வழங்கினார் விஜய்.

சத்துவாச்சாரி ரங்காபுரம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவுக்கு நிர்வாகிகள் தியாகராஜன், அப்சரா பாலாஜி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்று பேசினார். மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்ட 11 ஜோடிகளுக்கு நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா திருமாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தனர்.

திருமணம் முடிந்ததும் 11 ஜோடிகளுக்கு 51 வகையான சீர்வரிசை பொருட்களை விஜய் வழங்கினார்.

இதனையடுத்து மணமக்கள் குடும்பத்துடன் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டார். திருமணத்தில் மக்கள் இயக்கம் மாநில பொறுப்பாளர் ஆனந்த், செயலாளர் ரவிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடிகர் விஜய்க்கு மேளதாளத்துடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

திருமண மண்டபம் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெரும் சிரமப்பட்டனர் போலீசார்.

 

Post a Comment