ஐ படத்தில் விக்ரம் சம்பளம்ரூ 15 கோடி!!

|

Vikram Gets Rs 1 Cr I

சென்னை: ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் விக்ரமுக்கு சம்பளம் ரூ 15 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் விக்ரம். பத்தாண்டுகளுக்கு மேல் போராடி, சேது படத்துக்குப் பிறகு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் தமிழில். அதைக் கெடுத்துக் கொள்ள அவரே அவ்வப்போது மஜா, ராஜபாட்டை போன்ற குப்பைப் படங்களை செய்வதும் உண்டு.

ஆனாலும், அவரது நடிப்பு திறமை, ஆர்வம் அவரது இடத்தை இன்னும் அப்படியே வைத்துள்ளது.

இப்போது தமிழில் இரு பெரிய பட்ஜெட் படங்களில் அவர் நடித்து வருகிறார். ஒன்று தாண்டவம். வரும் செப்டம்பரில் இந்தப் படம் வரவிருக்கிறது.

அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ஐ. இந்தப் படத்துக்காக விக்ரம் பெறும் சம்பளம் ரூ 15 கோடி என்கிறார்கள். ஏற்கெனவே விஜய்யும் அஜீத்தும் இந்த சம்பளத்தைத் தாண்டிவிட்டார்கள். விக்ரம் இப்போதுதான் இந்த ரேஞ்சுக்கு வந்திருக்கிறார்.

ஐ படத்தின் பட்ஜெட் ரூ 85 கோடி என்கிறார்கள். விக்ரமுக்கு உள்ள ரசிகர்கள், படத்தின் தமிழ் - தெலுங்கு -இந்தி உரிமைகள் அனைத்தையும் கணக்கில் வைத்து இந்த அளவு பட்ஜெட் போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கூட்டிக் கழிச்சி, கணக்கு சரியா வந்தா ஓகே!

 

Post a Comment