ஒரு கோடியைக் கூட வசூலிக்காத பில்லா 2 ! - கடுப்பில் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்

|

Billa 2 Flops At The Us Uk Box Office   

லண்டன்: அஜீத்தை கிங் ஆப் ஓபனிங் என்று வர்ணிப்பது அவரது ரசிகர்களின் விருப்பமான விஷயம்.

உண்மையில் ரஜினிக்குப் பிறகு, அவர் படத்துக்குதான் தமிழகத்தில் அதிக நாள் ஓபனிங் என்பதும் உண்மைதான்.

ஆனால் பில்லா 2 எல்லாவற்றையும் சொதப்பிவிட்டது. தமிழகத்தில் இரண்டாவது வாரமே டல்லடித்துப் போயின திரையரங்குகள். வேறு படங்களை மாற்று ஒப்பந்த முறையில் திரையிட்டு வந்தனர்.

இப்போது வெளிநாட்டில் இந்தப் படம் என்ன வசூலித்தது என்ற விபரம், அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.

அதன்படி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு கோடி ரூபாயைக் கூட வசூலிக்க முடியாமல் படுதோல்வியைத் தழுவியுள்ளது பில்லா 2.

தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரை, அமெரிக்காவும், பிரிட்டனும் முக்கியமான சென்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் படங்களிலேயே இந்த இரு நாடுகளிலும் அதிக தியேட்டர்களில் வெளியானது பில்லா 2தான்!

பிரிட்டனில்..

பில்லா 2 முதல்வாரம் ஈட்டிய தொகை ரூ 61.20 லட்சம். பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் 20 அரங்குகலில் படம் வெளியானது.

அமெரிக்காவில்...

அமெரிக்காவில் 31 அரங்குகளில் இந்தப் படத்தை வெளியி்ட்டனர். அங்கு மொத்தம் ரூ 64 லட்சத்தை மட்டுமே இந்தப் படம் வசூலித்துள்ளது. இது மங்காத்தாவின் வசூலைவிட மிகக் குறைவு.

மொத்தம் மூன்று வாரங்களில் அமெரிக்காவில் 90 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்த நிலையில், தூக்கப்பட்டுள்ளது பில்லா 2. பிரிட்டனில் இன்னும் குறைவாக, ரூ 79 லட்சத்துடன் தூக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.

இத்தகவல்களை, பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படம் மூலம் வெளிநாட்டு உரிமையை வாங்கியவர்களுக்கு நஷ்டமே கிடைத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

 

Post a Comment