2000 வது அத்தியாயத்தை எட்டும் ஆதவனின் அமுத கானம்!

|

Mega Tv Amuda Ganam Crosses 2000 Episodes

மெகா டிவியில் ஒளிபரப்பாகி வரும் அமுத கானம் நிகழ்ச்சி 2000 மாவது எபிசோடை எட்டியுள்ளது. நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக இதனை தொகுத்து வழங்கும் இயக்குநர் ஆதவனின் தொகுப்புரை பல தரப்பட்ட ரசிகர்களை இந்த நிகழ்ச்சிக்கு பெற்றுத்தந்துள்ளது (சமயத்தில் கொஞ்சம் ஓவராகப் போனாலும்...!).

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற, காலத்தால் அழியாத, மெல்லிசைப் பாடல்களின் தொகுப்புதான். இந்த நிகழ்ச்சி மெகா டிவியில் தினமும் காலை 8 மணிமுதல் 9 மணி வரைக்கும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இரவிலும் மறு ஒளிபரப்பாகிறது.

பாடல்களை மட்டுமே ஒளிபரப்பாமல், அந்த பாடல் பற்றி சுவையான செய்திகளையும், விளக்கங்களையும் தொகுத்து வழங்குகிறார் இயக்குநர் ஆதவன்.

ஒவ்வொரு பாடல் பற்றியும் இவர் விவரிக்கும்போது அந்த பாடலுக்கான பின்னணி, அதைப் பாடியவர்கள், பாடலை எழுதியவர், படத்தின் எந்த சூழலுக்காக அந்தப் பாடல் எழுதப்பட்டது, அந்த காலகட்டத்தில் அந்தப் பாடல் ஏற்படுத்திய இசைத்திருப்பம் என அத்தனையையும் விலாவாரியாக ஆதவன் விவரிப்பதால், அந்த பாடல் பற்றிய முழு தகவலும் நேயர்களின் மனதில் இடம் பிடிப்பதோடு பாடலையும் வெகுவாக ரசிக்க வைக்கிறது.

கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை கடந்து 2000 எபிசோடை எட்டிப் பிடித்திருக்கிறது!

 

Post a Comment