ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ச ரி க ம ப சேலஞ்ச் 2012 ம் ஆண்டிற்கான குரல் தேர்வு ஞாயிறன்று கோவையில் நடைபெற்றது. நடுவர்களாக இசைக்கலைஞர் மோகன் வைத்யாவும், பாடகி பிரசாந்தியும் பங்கேற்ற கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 470க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது இசையில் ஆர்வமுடைய பலரும் பங்கேற்று தங்களின் இனிமையான குரல்களில் பாடல்களைப் பாடி நடுவர்களை அசத்தினர். இவர்களில் 102 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பாடல்களைப் பாட அனுமதிக்கப்பட்டனர். மனதை மயக்கும் மெலடி பாடல்கள், துள்ளவைக்கும் திரை இசைப்பாடல்கள் என நடுவர்களின் மனதைக் கவரும் வகையில் பாடிய போட்டியாளர்கள் 36 பேர் சென்னையின் நடைபெறும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ச ரி க ம ப சேலஞ்ச் 2012 ரியாலிட்டி ஷோவுக்கான குரல் தேர்வு ஏற்கனவே மதுரை, திருச்சி யில் நடைபெற்றுள்ளது. ஞாயிறன்று கோவையில் நடைபெற்றது. இந்த ஷோவுக்கான அடுத்த கட்டத் தேர்வு ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
Post a Comment