மும்பை: ஆபாச படங்களில் நடிக்கும் சன்னி லியோனின் முதல் பாலிவுட் படமான ஜிஸ்ம் 2வின் போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதால் மாநகரப் பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றுமாறு மும்பை மேயர் சுனில் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
ஆபாச படங்களில் நடிப்பவர் கனடா வாழ் இந்தியரான சன்னி லியோன்(31). பிக் பாஸ் ரியாலி்ட்டி ஷோவுக்காக இந்தியா வந்த அவர் இங்கு மிகவும் பிரபலமாகிவிட்டார். இதையடுத்து பாலிவுட் நடிகையும், இயக்குனருமான பூஜா பட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திலும் அவர் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.
இதையொட்டி மும்பை மாநகரப் பேருந்துகள் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் அப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையில் மாகரப் பேருந்துகள் உள்பட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்கள் மி்கவும் ஆபாசமாக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. வித்யா சவான் மும்பை மாநகராட்சியில் புகார் கொடுத்தார்.
இது குறித்து மேயர் சுனில் பிரபு கூறுகையில்,
ஜிஸ்ம் 2 பட போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக உள்ளன என்று எம்.எல்.ஏ. சவான் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து நான் மும்பை மாநகரப் பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை உடனே அகற்ற உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
Post a Comment