ஜெயா டிவியின் சுதந்திர சிறப்பு நிகழ்ச்சியில் இளையராஜாவும் கவுதம்மேனனும் இணைந்து ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்க உள்ளனர்.
கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா - சமந்தா நடித்துள்ள படம் ‘நீதானே என் பொன்வசந்தம்'. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இதற்கான பாடல்களை லண்டனில் சென்று இசை அமைத்தார் இளையராஜா. ‘நீதானே என் பொன் வசந்தம்' படத்தின் தலைப்பைப் போலவே பாடல்களும் கவிதையாய், மெலடி மெட்டுக்களாய் அமைந்துள்ளன. அதனால்தான் இந்தப் படம் வெளியாகும் முன்பே பாடல்களைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த திரைப்படத்தினைப் பற்றியும், பாடல்கள் உருவானவிதம், லண்டனில் அவை ஒலிப்பதிவு செய்யப்பட்ட விதம் பற்றியும் கவுதம் மேனனும், இளையராஜாவும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஜெயா டிவி'யில் ஆகஸ்ட் 15 ம் தேதி இரவு 9.30 மணிக்கு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.
Post a Comment