'புதுப் படத்துல இனியாவப் போடுங்க...'- இசையமைப்பாளரின் நிபந்தனை!

|

Music Director Recommends Iniya New Movie

"எங்கேயும் எப்போதும்' என்ற ஒரே படம் மூலம் 'முன்னணி' இசையமைப்பாளராகிவிட்டாராம் சத்யா. பெயரைக் கூட இப்போது சத்தியமூர்த்தி என்று மாற்றி வைத்துக் கொண்டுள்ளாரா.

இவரை தங்கள் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப் போயிருக்கிறார்கள் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தினர்.

பொதுவாக ஒரு இசையமைப்பாளரின் வேலை, முழு கதையையும் முதலில் கேட்டுவிட்டு, பாடலுக்கான சூழலைப் புரிந்து இசையமைப்பதுதான்.

ராஜா, ரஹ்மான், யுவன் என யாராக இருந்தாலும் இதுதான் வழக்கம்.

ஆனால் நம்ம சத்யா என்கிற சத்யமூர்த்தியோ, "படத்தோட தலைப்பு சரியில்ல, மாத்துங்க, கதையில இன்னும் விஷயங்களைச் சேருங்க..." என்று தன் அலப்பறையை ஆரம்பித்திருக்கிறார்.

அடுத்து அவர் போட்ட கண்டிஷன்தான் தயாரிப்பாளர்களை திரும்பிப் பார்க்காமல் தெறித்து ஓட வைத்திருக்கிறது. "இன்னொரு சின்ன சஜஷன்... இந்தக் கதைக்கு இனியாதான் பொருத்தமா இருப்பார், அதனால ஒடனே இனியாவை கதாநாயகியா போடுங்க... அப்பதான் எனக்கு இந்தப் படம் செட்டாகும... மியூஸிக் பண்ணுவேன்..' எனச் சொல்லிவிட்டாராம்.

என்னடா இந்த படத்துக்கு வந்த சோதனை என டென்ஷனாகிவிட்ட இயக்குநர்... சரி... இனியாதான் வேணும்னு இவர் ஏன் நுனிவிரல்ல நிக்கிறாரு? என உதவிகளிடம் கேட்க... அவர்கள் புரியாமல் நின்றார்களாம்.

ஏங்க.. உங்களுக்கு ஏதாவது புரியுதா?!

 

Post a Comment