சுந்தர்.சி. - அஞ்சலி பற்றிய கிசு கிசுதான் லேட்டஸ்ட் ஆக கோலிவுட் வட்டாரங்களில் உலா வரும் செய்தி. ஆனால் தனக்கும் சுந்தர்.சிக்கும் இடையில் எதுவும் இல்லை என்று மறுத்துள்ளார் அஞ்சலி. தன்னைப் பற்றி கிசு கிசு பரப்புவதே 'நெட்' ஆட்களுக்கு வேலையாகப் போய்விட்டது என்று செல்லமாக கோபித்துக்கொண்டிருக்கிறார்.
ஆயுதம் செய்வோம் படத்தில் சுந்தர்.சி யுடன் ஜோடியாக நடித்தார் அஞ்சலி, பின்னர் அவரது இயக்கத்தில் கலகலப்பு படத்தில் கதாநாயகியாக நடித்து கவர்ச்சியும் காட்டினார். இப்பொழுது சுந்தர்.சி யின் இயக்கத்தில் விஷால் ஜோடியாக எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்கிறார்.
சுந்தர்.சி.யின் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதால் கிசுகிசுவை கிளப்பிவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். அஞ்சலி அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் படத்தில் அவரது தம்பிக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போது திருப்பதிக்கு சென்று ஏழுமலையானிடம் வேண்டிக்கொள்வாராம் அஞ்சலி. அப்படி செய்தால் படம் ஹிட் ஆகும் என்பது நம்பிக்கையாம்.
Post a Comment