ஆயிர்வேத சாலையில் மசாஜ் பார்லரில் வேலை பார்க்கும் பெண் ஒருவரைப் பற்றி ஒரு இளைஞன் சொல்லும் பொய் அவளை எப்படி சிதைத்துவிடுகிறது என்பதைச் சொல்கிறதாம் சௌந்தர்யா திரைப்படம்.
ஏ.பி.சி. ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதை எழுதி டைரக்ஷன் செய்து உள்ளார் சந்திரமோஹன்.
புதுமுகங்கள் கோவிந்த், கில்லர் காசிம், ரித்தூஸன், சாரதி, சந்தோஷ், வினித் வினு, சஞ்சுகொட்டேரி என்று பலர் நடிக்க, இவர்களுடன் மாறுபட்ட வேடத்தில் எப்எம்எஸ் நடராஜன் நடித்துள்ளார்.
ஆயுர்வேத வைத்தியசாலையில் மஜாஜ் வேலை செய்யும் அழகிய இளம் பெண் செளந்தர்யா. அவள் அழகில் மயங்கும் விமல், அவள் தன்னிடம் அப்படி பழகுவாள் இப்படி நடந்து கொண்டாள் என்று இல்லாத பொல்லாத செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள, அந்த பொய் செய்தியை நம்பும் நான்கு இளைஞர்கள், செளந்தர்யாவிடம் சென்று தங்களது ஆசைக்கும் இணங்குமாறு வலியுறுத்துகின்றனர். அதற்கு அவள் சம்மதிக் மறுக்கிறாள்.
இதனால் ஆத்திரம் அடையும் அந்த நால்வரும் அவளை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். அந்த வன்முறை தாங்காது செளந்தர்யா உயிரை இழக்கிறாள். பிறகு அவள் ஆவியாக வந்து அவர்களை எப்படி பழி வாங்குகிறாள் என்பதை புதிய களத்தில், புதிய கோணத்தில், புதிய ஸ்டைலில் படமாக்கி உள்ளேன் என்கிறார், இயக்குநர் சந்திமோஹன்.
மேலும் அவர் கூறுகையில், "இந்தப் படத்துல ஒரு மெசேஜ் இருக்கு. சீரியஸா இருந்தாலும் அதை உணர்ற மாதிரி நகைச்சுவையோடு சொல்லிருக்கேன்.ரெண்டரை மணி நேரம் போவதே தெரியாமல் கலகலப்பாக படம் இருக்கும்..." என்றார்
தயாரிப்பாளர் குருவண்ண பஷீர் கூறுகையில், "யார் தப்பு செய்தாலும், அவர்களுக்கு இந்த பூமியிலேயே தண்டனை கிடைச்சிடும் என்பதுதான் இந்தப் படத்தோட கருத்து. தீஙகு செய்யமால் இருக்கவும், தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவற்றை நினைத்து சிலர் திருத்திக்க ஒரு வாய்ப்பாகவும் ஒரு உணர்வை ஏற்படுத்தும் படமாக இந்தப் படம் இருக்கும். செய்த தவறை நினைத்து ஒரு ஆள் வருத்தப்பட்டால் கூட எங்களுக்கு பெரிய திருப்திதான்..." என்றார்.
இந்தப் படத்திற்கு அஜ்மல் அஜீஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார். பாடல்களை கவிகுமரன் எழுதி உள்ளார்.
சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் இந்தப் படத்தின் இசை நேற்று வெளியிடப்பட்டது.
Post a Comment