பவர்ஸ்டார் சீனிவாசன் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றாலே மீடியாக்களுக்கு கொண்டாட்டம்தான். பேட்டியோ, ரியாலிட்டி ஷோவோ, எதுவென்றாலும் அதற்கு தனி விளம்பரம் தேடிக்கொள்வதோடு நிகழ்ச்சியின் டிஆர்பியையும் ஏற்றிக்கொள்வார்கள். அப்படித்தான் நீயா, நானா நிகழ்ச்சியில் பங்கேற்று கோபிநாத்தை மட்டம் தட்டி தனக்கென்று புதிய ரசிகர்களை உருவாக்கினார் சீனிவாசன். கோவை சரளா நடத்தும் பாசப்பறவைகள் நிகழ்ச்சியில் குடும்பத்தோடு பங்கேற்று எதிலும் தான் ஸ்பெசல் என்று நிரூபித்தார்.
அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ரோஜா நடத்தும் லக்கா, கிக்கா நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மீண்டும் மீடியா வெளிச்சத்தில் சிக்கியுள்ளார் சீனிவாசன். அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஆகஸ்ட் 13 ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் கடந்த வாரத்தில் இருந்தே அதற்கான விளம்பரம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
தொண்டர்கள் புடைசூழ வரும் பவர்ஸ்டாருக்கு ஆளுயர மாலை போட்டு அமர்க்களப்படுத்திவிட்டனர். டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் சிறப்பு விருந்தினர் ஒருவருக்கு கட் வைப்பது அநேகமாக பவர்ஸ்டாருக்காகத்தான் இருக்கும்.
ரியாலிட்டி ஷோ, கேம்ஷோ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்போது சிறப்பு விருந்தினர்கள் என்ற பெயரில் சின்னத்திரை நடிகர்களோ, சினிமா நடிகர்களோ பங்கேற்கின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியும் அந்த வரிசையில் வந்து விட்டது. லக்கா கிக்கா நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாகவே சின்னத்திரை நட்சத்திங்கள்தான் பங்கேற்கின்றனர். அந்த வரிசையில் வரும் ஆகஸ்ட் 13 ம் தேதி பவர்ஸ்டார் சீனிவாசன் பங்கேற்றுள்ள நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
கண்டு ரசிங்க.... ஸ்டார்ட் மியூசிக் ....!
+ comments + 1 comments
yjjyjy
Post a Comment