சுதந்திர தினத்தை ஒட்டி விடுமுறை நாளில் கல்லா கட்டுவதற்காக தொலைக்காட்சிகளில் சிறப்பு திரைப்படங்களை வரிசையாக ஒளிபரப்புவார்கள். சன் தொலைக்காட்சியில் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று அரவான் திரைப்படமும், வேங்கை திரைப்படமும் ஒளிபரப்புகின்றனர்.
சுதந்திர தினத்தன்று நடிகர், நடிகையர்களை வைத்து பேட்டி என்ற பெயரில் அவர்களை கேள்வி கேட்பதும், அவர்கள் நடித்த திரைப்படங்களைப் போடுவதும்தான் தமிழ் சேனல்களின் பாரம்பரியம். அன்றைய தினம் சுதந்திரத்தைப் பற்றி எதுவும் கூறுவார்களோ இல்லையோ கண்டிப்பாக மூன்று அல்லது நான்கு திரைப்படங்களாவது போடுவார்கள்.
இந்த ஆண்டு கில்லி, அரவான், வேங்கை திரைப்படங்களை ஒளிபரப்பி புண்ணியம் கட்டிக்கொள்கிறது சன் டிவி. கே. டிவியில் கேட்கவே வேண்டாம் அரதப் பழசான படமாக ஒளிபரப்புகிறார்கள். அதில் முக்கியமானவை ஜெய்ஹிந்த், வீராப்பு, பழனி போன்ற திரைப்படங்கள். சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை பாருங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுங்கள் என்று கூறுவது தொலைக்காட்சி நிலையத்தாரின் தேசபக்தியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
Post a Comment