பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கரீனா கபூரின் வாய்ப்பை தட்டிப் பறிப்பதிலேயே குறியாக உள்ளார்.
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ராம்லீலா படத்தில் நடிக்க கரீனா கபூர் ஒப்பந்தமானார். அதன் பிறகு கரீனாவுக்கு திருமணம் என்ற அறிவிப்பு வந்தவுடன் பன்சாலி வேறு கதாநாயகியைத் தேடினார். உடனே பிரியங்கா சோப்ரா அவரை அணுகி தான் நடிப்பதாக விருப்பம் தெரிவித்தார். அதற்குள் கரீனா திருமணத்தை தள்ளிவைத்ததால் அந்த வாய்ப்பு அவருக்கே மீண்டும் சென்றது.
இந்நிலையில் இயக்குனர் பிராகஷ் ஜா தான் எடுக்கவிருக்கும் சத்யாகிரஹா படத்திற்கு கரீனாவை கதாநாயகியாக்குவது என்று தீர்மானித்துவிட்டார். இருப்பினும் பிரியங்கா அவரை அணுகி தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது செக்ரடரியை அனுப்பி தான் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும் வரை சத்யாகிரஹா கதாநாயகியை உறுதி செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
கரீனா தான் நடிக்க வேண்டும் என்று பிரகாஷ் முடிவு செய்த பிறகு அந்த வாய்ப்பை எப்படியாவது தட்டிப் பறிக்க நினைக்கிறார் பிரியங்கா.
Post a Comment