இந்தப் பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ள ரசியாபி முஹம்மத் தயாரிக்கும் முதல் படத்துக்கு அகடம் என்று தலைப்பிட்டுள்ளனர்!
லாஸ்ட் பெஞ்ச் பையன்கள் மீதான தப்பான அபிப்பிராயத்தை மாற்ற பட நிறுவனத்துக்கே இப்படி பெயர் வைத்தாராம் ரசியாபி முஹம்மத்.
அகடம் என்றால் தமிழில் கபடம் அல்லது அநீதி என்று பொருள்.
இந்தப் படத்தை இசாக் என்ற சாப்ட்வேர் எஞ்ஜினீயர் இயக்குகிறார். கதாநாயகனாக தமிழ், ஸ்ரீநி (அய்யர்) ஆகிய இரு இளைஞர்கள் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள். இதில் ஸ்ரீநி முறையாக பரதம் பயின்றவர்.
இரு புதுமுகங்களை நாயகிகளாக அறிமுகமாகவிருக்கிறார்கள்.
நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்ய, பவன் இசையமைக்கிறார். துரைராஜ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
முழுக்க முழுக்க திகில் காட்சிகள் நிறைந்த க்ரைம் த்ரில்லர் படமாம் இது. சென்னையில் இம்மாத இறுதியில் தொடங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஒரே ஷெட்யூலாக முடிக்கப்பட்டு, நவம்பரில் திரைக்கு வருகிறது.
Post a Comment