சன் தொலைக்காட்சியில் காலை நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த வணக்கம் தமிழகம் நிகழ்ச்சி புத்தம் புது பொலிவாய் சூரிய வணக்கமாய் மாறியிருக்கிறது. நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் புதிதாய் உற்சாகமாய் இருப்பது நிகழ்ச்சியின் மெருகினை கூட்டியிருக்கிறது.
அரங்கில் அமர்ந்து பேசிய சாலமன் பாப்பையா, அழகாய் அவுட்டோரில் அமர்ந்து செய்தி சொல்கிறார். ராஜாவும், பாரதி பாஸ்கரும் அற்புதமான தகவல்களை எளிமையாய் பரிமாறிக்கொள்கின்றனர். யோகா நிகழ்ச்சி கூட புதிய பொலிவாய் அனைவரும் பின்பற்றும் வகையில் அமைந்திருக்கிறது.
சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் ரம்ஜான் தினத்தன்று சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டி.ராஜேந்தர் தன்னுடைய கருத்துக்களை, இசை மீதான காதலை பகிர்ந்து கொண்டார். இசைப்பது இறைவன், வாயசைப்பது நான் என்று டி. ராஜேந்தர் தன்னடக்கத்தோடு தெரிவித்தார். இசை வந்து எங்கும் எப்படியும் நிறைந்திருக்கும். இசை என்பது அனைவருக்கும் அப்பாற்பட்டது என்று கூறிய ராஜேந்தர் கரும்பு தின்ன கூலியா என்பதைப் போல இசையைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கு தன்னுடைய வாயினால் ஒரு இசை ராஜாங்கமே நடத்திவிட்டார் டி.ராஜேந்தர்.
Post a Comment