பாலச்சந்தரின் க்ளாஸிக் படமான நீர்க்குமிழியும் ரீமேக் அலைக்குத் தப்பவில்லை. அந்தப் படத்தை பாலச்சந்தரின் சிஷ்யரான பழைய பட ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் செல்வா இயக்கப் போகிறார்.
நாகேஷ் வேடத்தில் விவேக் நடிக்கிறார்.
1965-ல் வெளிவந்து ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கிய படம் நீர்க்குமிழி. நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியிருப்பார் நாகேஷ். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆடியடங்கும வாழ்க்கையடா.. இன்றும் ரசிகர்களின் நெஞ்சில் ரீங்காரமிடுகிறது.
நாகேஷ் வேடத்தில் விவேக் நடிக்க, இதே பெயரில் அந்தப் படத்தை இயக்குகிறார் செல்வா. இவர் ஏற்கனவே பாலச்சந்தர் இயக்கி, ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த ‘நான் அவனில்லை‘ படத்தை ரீமேக் செய்தவர்.
நீர்க்குமிழி ரீமேக் செல்வா கூறுகையில், "ரீமேக் என்பது தப்பான காரியமல்ல. நல்ல விஷயம். பழைய க்ளாஸிக் படங்களை உயிர்ப்புடன் வைக்க உதவும். அந்த வகையில்தான் நீர்க்குமிழி ரீமேக் இருக்கும். இந்தப் படத்தின் உரிமையைப் பெற்ற பிறகு முறையான அறிவிப்பு வரும். விவேக்தான் ஹீரோவாக நடிக்கிறார்,' என்றார்.
Post a Comment