நடிப்பு பற்றி எதுவுமே தெரியாமல் வந்த என்னையும் ஒரு நடிகனாக்கியவர் இயக்குனர் கே. பாலச்சந்தர் என்று கமல் ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் சந்தோஷம் விருது வழங்கும் விழா நடந்தது. அதில் இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல் ஹாசன் தனது குருவுக்கு அந்த விருதை வழங்கினார்.
அதன் பிறகு அவர் பேசியாதவது,
நடிப்பு பற்றி எதுவும் கற்றுக்கொள்ளாமலேயே திரையுலகிற்கு வந்தேன். எங்களுக்குள் இருந்த திறமையைப் பார்த்து அவர் எங்களை ஊக்குவித்தார் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் நாங்கள் திரையுலகிற்கு வந்தபோது நடிப்பு பற்றி எதுவுமே தெரியாது. பாலச்சந்தர் தான் எங்களை எல்லாம் நடிகராக்கினார். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது என்பது திரை உலகிற்கே விருது வழங்குவது போன்றாகும் என்றார்.
Post a Comment