ஸ்ரீதேவியுடன் நடிக்க பணம் வாங்காத அஜீத்!

|

Ajith Refused Accept Payment English Winglish

சென்னை: ஸ்ரீதேவியுடன் நடிக்க பணம் வாங்க மறுத்த அஜீத், தனக்கான பகுதியை இலவசமாகவே, அதுவும் தன் சொந்த செலவில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

பல வருடங்களுக்குப் பிறகு நடிகை ஸ்ரீதேவி ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கிலும் ரிலீசாகிறது.

ஆங்கிலம் தெரியாத ஒரு குடும்பத் தலைவியின் அவஸ்தைகளே படத்தின் கதை. அக்டோபர் 5-ந்தேதி படத்தை ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.

தமிழ் பதிப்பில் அஜீத்தை கவுரவ தோற்றத்தில் நடிக்க வைக்க விரும்பினர். அஜீத்தை அணுகி கேட்டபோது உடனடியாக சம்மதித்தார்.

மும்பையில் படப்பிடிப்புக்காக பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டன. இதில் நடிப்பதற்கு அஜீத்துக்கு கணிசமான தொகை சம்பளமாக கொடுக்க தயாரிப்பாளர் முன்வந்தார். மும்பை வந்து செல்வதற்கான விமான செலவுகள் ஓட்டலில் தங்கும் செலவு போன்றவற்றையும் தரத் தயாராக இருந்தனர்.

அதன்படி சென்னையிலிருந்து மும்பைக்குப் போய் நடித்துக் கொடுத்துவிட்டார் அஜீத்.

ஆனால் தனக்கு தரப்பட்ட சம்பளத்தை வாங்க மறுத்துவிட்டார். அதுமட்டுமல்ல, தனக்கான பயணச் செலவு, ஒட்டல் பில் அனைத்தையும் தானே ஏற்றுக் கொண்டார்.

பாலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் அவரை வியந்து பாராட்டியுள்ளனர்.

 

Post a Comment